20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!!

20 ஆண்டுகளாக உடலுக்குள் மறைந்து இருந்த நோய்..!! கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சனுக்கு நேர்ந்த சோகம்..!!

மரணத்தை வெல்லும் முயற்சியில் அமெரிக்க கோடீஸ்வரர் ஆன பிரையன் ஜான்சன் அவர்கள் முழு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடந்தது என்ன?
அவருக்கு ஆட்டோ இம்யுன் கேஸ்ட்ரிஸ் எனப்படும் அரிய வகை விசித்திர நோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வகை நோய் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி இரைப்பையின் சுவரில் உள்ள செல்களை தாக்கி அழிக்கும் ஒரு தன்னுடல் தாக்க நோயாகும்.

இந்த நோய் சுமார் 20 ஆண்டுகளாக அவரது உடலுக்குள் அறிகுறிகள் ஏதும் இல்லாமல் மறைந்திருந்துள்ளது. தொடர்ந்து குறைவான இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தது மூலமாக இந்த நோய் கண்டறியப்பட்டிருக்கிறது.

அவருடைய வயிறு தன்னைத்தானே உண்கிறது என அவர் இந்த நோயைப் பற்றி விவரித்துள்ளார்.

இதனால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மற்றும் வயிறு சார்ந்த புற்றுநோய் ஆபத்துகள் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறு இந்த நோயை கண்டறியலாம்?
வருடாந்திர உடல் பரிசோதனைகள் மற்றும் கடுமையான ஆரோக்கிய Blueprint நடைமுறைகளை மேற்கொண்ட போதிலும் இந்த நோய் கண்டறியப்படவில்லை.

இறுதியாக இரைப்பை எண்டோஸ்கோபி மற்றும் பயாப்ஸி பரிசோதனைகள் மூலமாக அவரது இரைப்பையில் உள்ள திசுக்களில் ஏற்பட்ட பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய்க்காக வருடத்திற்கு 16 கோடி செலவழித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கமான மருத்துவ முறைப்படி இந்த நோய்விற்கு எந்த ஒரு தீர்வுகளும் இல்லை என்பதை தெரியவந்துள்ளது. மேலாண்மை மட்டுமே சாத்தியமானால் இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு நவீன தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட ஆன்டிபாடிகள் மற்றும் புதிய செல் சிகிச்சைகளை அவர் பரிசோதனை செய்ய உள்ளதாக தெரியவந்துள்ளது.