சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் பரபரப்பு..!! கல்வி நிலையத்தில் நடந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் மாணவர்களைக் கொடூரமாக சித்திரவதை செய்து, 6 வயது சிறுவனை அவனது சொந்த சிறுநீரையேக் குடிக்கக் கட்டாயப்படுத்திய 31 வயது நபர் நீதிமன்றத்தில் தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பிள்ளையின் அடையாளப் பாதுகாப்பைக் கருதி நீதிமன்றம் அந்த நபரின் பெயரை வெளியிடவில்லை.


கல்வி நிலையம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்த வந்த நபர், அங்கு தங்கியிருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கணிதமும் ஆங்கிலமும் கற்றுக் கொடுத்து வந்துள்ளார்.

6 வயது சிறுவனை பல மணி நேரம் தண்டனை வடிவில் இருக்க வைப்பது, ஆடை மாட்டும் கம்பியால் 600க்கும் மேற்பட்ட முறை அடிப்பது, உணவை கட்டுப்படுத்தி பட்டினி போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாகத்தால் சிறுவன் அழுதபோது ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்க செய்து அதனை அவனையே குடிக்க வைத்துள்ளார்.

இது போன்ற கொடூரமானத் தாக்குதலால் அந்த சிறுவனுக்கு விலா எலும்பு முறிவு, நுரையீரல் காயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு, 15 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுவன் மட்டுமின்றி அங்கு தங்கியிருந்த 10 மற்றும் 11 வயதுடைய வேறு 2 மாணவர்களையும் அந்த நபர் சித்திரவதை செய்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று(ஜூலை 9) நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், குழந்தை வதை மற்றும் கடுமையான காயம் விளைவித்தது உள்ளிட்ட குற்றசாட்டுகளை அந்த நபர் ஒப்புக்கொண்டு உள்ளார்.

இந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பும் தண்டனை விவரங்களும் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.