சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

சிங்கப்பூர்: HDB குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம்..!!

சிங்கப்பூரில் சோவா சூ காங் பகுதியில் உள்ள ஒரு HDB குடியிருப்புப் பகுதியில் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்.

மேலும் ஒரு ஆண் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் ஆனது நேற்று (மே 26) இரவு சுமார் 9:00 மணி அளவில் சோவா சோ ஹாங் அவன்யூ 2 பிளாக் 248இல் நடந்துள்ளது.

பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாகவும், பெண்ணை குத்திய ஆண் உயரத்திலிருந்து கீழே நடந்ததாகவும் தற்பொழுது சந்தேகிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த அந்த நபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் முன்பு காதலர்களாக இருந்து பின்னர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. உறவு முறை தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குடியிருப்புத் தரைத்தளத்தில் உள்ள குப்பை அறைக்கு அருகில் உள்ள பகுதியைக் காவல்துறையினர் இந்த சம்பவம் காரணமாக சுற்றி வளைத்துள்ளனர்.

சோவா சூ காங் அவன்யூ 2 , பிளாக் 248 இல் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக இரவு 8:55 மணி அளவில் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து SCDF வீரர்கள் சம்பவ இடத்தில் ஒரு உயிரிழந்ததாகவும், மற்றொருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK