எகிப்து – சிங்கப்பூர் உறவில் புதிய அத்தியாயம்..!!

எகிப்து – சிங்கப்பூர் உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஜனாதிபதி திரு. தர்மன் சண்முகரத்தினம் அதிகாரத்துவ பயணமாக நேற்று(22.09.25) எகிப்திற்குச் சென்றார்.

அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது முதல் அரசு பயணமாக இதை மேற்கொண்டார்.

எகிப்துக்கான தனது அரசு பயணத்தை முடித்த பின் ஊடகங்களுக்கு அளித்த உரையில், அவர் தனது பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் கூறினார்.

மேலும் எகிப்திய தலைவர்கள் சிங்கப்பூருடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை எதிர்நோக்குவதாகவும், இது இரு நாடுகளுக்கிடையிலான உறவில் புதிய கட்டத்தை குறிக்கிறது என்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.

தர்மன் சண்முகரத்னம், இரு நாடுகளின் பகிரப்பட்ட மூலோபாய நலன்கள் மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் உறுதிப்பாடு ஆகியவை உரையாடல்களில் தெளிவாக வெளிப்பட்டதாகக் கூறினார். மேலும், ஏற்கனவே உறுதியான நிலையில் இருக்கும் பொருளாதார உறவுகள் எதிர்காலத்தில் இன்னும் ஆழமாகும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

“சிங்கப்பூர் எகிப்தின் போட்டியாளர் அல்ல. மாறாக, எகிப்தின் ஏற்றுமதித் தொழிலுக்கு ஆதரவளிக்கக்கூடிய பல இடைநிலை தயாரிப்புகளை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். வளர்ச்சியை அடையவும், ஏற்றுமதி சக்தியாக மாறவும், எகிப்து ஏற்றுமதியை நம்பியுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இரு தரப்பினரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்தும் ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

 

WHATSAPP CHANNEL LINK👉