ACS(I) மாணவர் உயிரிழப்பு வழக்கு..! நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

ACS(I) மாணவர் உயிரிழப்பு வழக்கு..! நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

சிங்கப்பூரின் Anglo-Chinese School (Independent) பள்ளி மாணவர் Jethro Puah Xin Yang உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி, 15 வயதான Jethro உட்பட 28 மாணவர்கள் Yishun-ல் உள்ள SAFRA Adventure Sports Centre-ல் உயரமான கயிறு சாகசப் பயிற்சியில் பங்கேற்றனர்.

சுமார் 15 மீட்டர் உயரத்தில் இருந்த தடையை கடக்கும்போது Jethro தவறி விழுந்தார். பாதுகாப்பு Harness காரணமாக அவர் தரையில் விழாமல் அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தார்.

அவரை மீட்க பயிற்றுநர்கள் 30 நிமிடங்களுக்கும் மேலாக முயன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுயநினைவின்றி மீட்கப்பட்ட Jethro மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மறுநாள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் Camelot நிறுவனமும் அதன் பொது மேலாளர் Liew Foo Loong-ம் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

மாணவரின் Harness முறையாகச் சரிபார்க்கப்படாதது, மீட்பு நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தது உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு முன்வைத்துள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு பயிற்றுநரான Muhammad Nurul Hakim Mohamed Din ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டு 6 மாத சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் ஒரு சாதாரண விபத்தாக கடந்து செல்லக்கூடியது அல்ல. 15 வயதில் கனவுகளுடன் இருந்த ஒரு மாணவனின் உயிரை பறித்த இந்த துயரம், பாதுகாப்பு நடைமுறைகளில் ஏற்படும் ஒரு சிறிய அலட்சியம்கூட எவ்வளவு பெரிய விலையை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துகிறது.

Jethro-வை இழந்த குடும்பத்தின் வலிக்கு எந்தத் தீர்ப்பாலும் முழுமையான நிவாரணம் கிடைக்காது. ஆனால், இந்த வழக்கின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, எதிர்காலத்தில் எந்த ஒரு மாணவரும் இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உயிரிழக்காத வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு மாணவனின் உயிர் திரும்பி வராது… ஆனால், அந்த உயிரிழப்பு மற்றொரு உயிரைக் காப்பாற்றும் பாடமாக மாற வேண்டும்.