பொது இடத்தில் பெண் மீது அத்துமீறல் ..!! 47 வயது நபர் மீது நடவடிக்கை..!!
சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் ரோடு வணிக வளாகத்தில் (Shopping Complex) 47 வயதுடைய நபர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் குத்தியும், உதைத்தும் அந்தப் பெண்ணை தாக்கியுள்ளாார்.
அந்தப் பெண்ணை தாக்கிய நபர், சுமார் 1 வருடத்திற்கு முன்பும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால் அவர் மீது நாளை (ஏப்ரல் 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
லக்கி பிளாசாவாக உள்ள 304 ஆர்ச்சர்ட் சாலையில் பிப்ரவரி 8 அன்று 33 வயது பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பிப்ரவரி 11ஆம் தேதி அன்று காலை 11:35 மணிக்கு தங்களுக்கு புகார் கிடைத்ததாக காவல்துறை இன்று (ஏப்ரல் 21) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரு நபரால் தாக்கப்பட்டும், உதைக்கப்பட்டும் உள்ளான பெண், பலத்த காயங்களுக்கு உள்ளாகி வலியால் துடித்ததாக கூறப்படுகிறது. அந்த நபர் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட அந்த நபர் கடந்த ஆண்டு (2025) மார்ச் 30ஆம் தேதியும் அந்த பெண்ணைத் தாக்கியுள்ளார்.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல் மற்றும் சேதம் விளைவித்தல் ஆகிய குற்றங்களுக்காக கடந்த ஆண்டு (2025) மே மாதம் 8- ஆம் தேதி அன்று, அந்த நபருக்கு 12 மாத கால நிபந்தனை எச்சரிக்கை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அந்த நபர் நிபந்தனையை எச்சரிக்கையை மீறி உள்ளார்.
மேலும் அந்த நபர் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியது தொடர்பான 2 குற்றச்சாட்டுகளையும், சேதமடைதல் தொடர்பான 2 குற்றச்சாட்டுகளையும் அந்த நபர் நாளை (ஏப்ரல் 22) எதிர்கொள்வார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
வர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிதைத்தண்டனையும், $5000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும், உடைமைகளை சேதப்படுத்தியதற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் காவல்துறை கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக அவரை தொடர்புக் கொண்டதாகவும், நிலைமையைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது போன்ற வன்முறை செயல்களைச் சற்றும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சட்டத்தை மீறுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.