மக்களே…!! புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க தயாரா..???

மக்களே...!! புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுபவிக்க தயாரா..???

சிங்கப்பூர்:பொங்கோலில் இன்று(31.12.25) நடைபெறவுள்ள புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிக்காக, குழுவினர் இரண்டு மாதங்களாக திட்டமிட்டு ட்ரோன் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளனர் என்று அடிமட்டத் தலைவர் வாங் ஜுன்ஜி தெரிவித்துள்ளார்.

பொங்கோலில் ட்ரோன்களை பயன்படுத்துவது,அந்த பகுதியின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் சிறந்த வாய்ப்பாக இருப்பதாகவும்,வாட்டர்வே பாயிண்ட் அருகிலுள்ள பாலம் போன்ற பரிச்சயமான காட்சிகள் இடம்பெறுவதால் குடியிருப்பாளர்களுக்கு நெருக்கமான உணர்வு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு நிகழ்ச்சி வரிசை மிகவும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாகவும், பொதுமக்கள் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாலே நடனங்கள், தற்காப்புக் கலை காட்சிகளை ரசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில், பெயிண்ட்பால் ஷூட்டிங், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற விளையாட்டு செயல்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நள்ளிரவு நெருங்கும் போது, ஐந்து நிமிடங்கள் நீளமான வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்று வானத்தை ஒளிரச் செய்யும். இந்த நிகழ்வில் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கன் கிம் யோங் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பொங்கோல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு குடியிருப்பாளர்களுடன் கவுண்டவுன் செய்ய உள்ளனர்.

இந்த புத்தாண்டு வரவேற்பு நிகழ்வில் சுமார் 15,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK