சிங்கப்பூர் மனித வள அமைச்சு வெளியிட்ட அதிரடி தகவல்..!!!

சிங்கப்பூர் மனித வள அமைச்சு வெளியிட்ட அதிரடி தகவல்..!!!

சிங்கப்பூரில் நடைபெறுகின்ற திருமணங்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளி படங்களை எடுப்பதற்கும் மணமக்களை அலங்கரிப்பதற்கும் போன்ற சேவைகளை சுயமாக செய்யும் வெளிநாட்டினரை சில நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக மனித வள அமைச்சுக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த செய்திகளை வழங்கக்கூடிய நிறுவனங்களுடைய சங்கமும் அமைச்சும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

திருமணம் சேவைகளுக்கு வெளிநாட்டினரை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. இது மிகவும் சட்ட விரோதமானவை.

வெளிநாட்டினர் வேலை வாய்ப்பு சட்டத்தை மீறிய செயலாகவும் இது உள்ளது என்று மனிதவள அமைப்பு விளக்கியுள்ளது.

முறையான வேலை வாய்ப்பு அனுமதி அட்டை இல்லாமல் சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு $20,000 வரை அபராதம் மேலும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

முக்கியமாக மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் எங்க வேலை செய்யவும் தடை விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

வெளிநாட்டினரை விதிகளை மீறி பணியில் அமர்த்திய நிறுவனங்களும் தண்டனைகளுக்கு உட்படுத்தப்படும்.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் ஒரு அங்கமாக இருக்கும் “விக்பா சங்கம்”, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அலங்காரம் மற்றும் படைப்பு சேவைகளுக்கு உள்ளூரில் உள்ள சுயசார்பு ஊழியர்களையும் நிபுணர்களையும் பயன்படுத்திக் கள்ள வேண்டும் என்று நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan