DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

DBS வங்கி பயனாளர்களுக்கு பணத் தள்ளுபடி..!! யாருக்கு கிடைக்கும்..?? எப்படி பெறுவது..??

சிங்கப்பூர் : DBS வங்கியானது அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 10 மில்லியன் டாலர் நிதியை வழங்க உள்ளதாக ஏப்ரல் 25ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது.

உள்நாட்டு நெருக்கடிக்கான அமைச்சர்கள் குழுவின் உறுப்பினராகவும் உள்ள போக்குவரத்து துறைக்கான தற்காலியின் அமைச்சரும் நிதி துறைக்கான மூத்த இணை அமைச்சருமான , சியூ சின் சியாங் அவர்கள் ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் இந்த பணத் தள்ளுபடி குறித்துக் கூறியுள்ளார்.

யாருக்கு கிடைக்கும்?:
ஆகஸ்ட் மாதம் முதல் சிங்கப்பூரில் சாலையோர உணவு கூடங்கள் அருகிலுள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடி பொருட்கள் வாங்கும் போது பணத் தள்ளுபடிகளை பெற முடியும்.

செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் சாலையோர உணவுக் கூடங்கள் மற்றும் அருகிலுள்ள கடைகளில் பணம் செலுத்த பேலா! (Pay Lah!) மின் -பணப்பையைப் பயன்படுத்தும் வாடிக்க்கையாளர்களும் இந்த 3 டாலர் பணத் தள்ளுபடியைப் பெறுவார்கள்.

எப்படி பெறுவது?:
ஆகஸ்ட் மாதம் முதல் குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்க DBS மற்றும் BOS அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் இந்த பண தள்ளுபடியைப் பெற முடியும்.

சிங்கப்பூரில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் ஒருவருக்கொருவர் உதவுகிறோம். அரசாங்கம் வணிகங்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இப்படித்தான் நாங்கள் சிரமங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கிறோம் என்று DBS வங்கி சிங்கப்பூரின் தலைவரான கம் சின் சுவாங் கூறியுள்ளார்.

எண்ணெய் உலையில் ஏற்பட்ட திடீர் உயர்வு வாழ்க்கை செலவு அதிகரிப்பிற்கும் வழிவகுத்துள்ள க் காரணத்தால் இது போன்ற நெருக்கடி ஏற்படும் ஒவ்வொரு முறையும் மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்க DBS வங்கியும் மற்றும் சேமிப்பு வங்கிகளும் முன்வந்துள்ளன.

இந்த தள்ளுபடிகள் குறித்த மேலும் சில விவரங்கள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்று DBS வங்கி தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK