சிலேத்தார் விரைவுச் சாலையில் இரட்டை விபத்து..!! என்ன நடந்தது..??

சிலேத்தார் விரைவுச் சாலையில் இரட்டை விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் (10.01.26) மத்திய விரைவுச் சாலையில் (CTE) சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கி,யியோ சூ காங் மற்றும் அங் மோ கியோ (SLE) அருகே இரண்டு போக்குவரத்து விபத்துகள் ஏற்பட்டன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நேற்று காலை 10:45 மணியளவில் மத்திய விரைவுச் சாலையில், ஆங் மோ கியோ அவென்யூ 5 வெளியேறும் இடத்திற்கு அருகில் சாலையின் ஒரு பகுதியான சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் காயமடைந்த ஒருவரை செங்காங் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர்.

அதேபோல் நேற்றிரவு 10:40 மணியளவில் மத்திய விரைவுச் சாலையில் சிலேத்தார் விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் போது கார்-மோட்டார் சைக்கிள் மோதியதாக தகவல் கிடைத்ததாகக் கூறினர். இந்த விபத்தில் காயமடைந்த 23 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் மஞ்சள் கட்டுமான வாகனம் மற்றும் பல போக்குவரத்து போலீஸ் மோட்டார் சைக்கிள்கள் சம்பவ இடத்தில் வந்திருந்ததையும் பல போலீசார் நிலைமையை ஒருங்கிணைத்து இருந்ததையும் காட்டுகின்றன.

போலீசார் இரு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK