கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

கிளமென்டி சந்திப்பில் பரபரப்பு விபத்து..!!சாலையில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

சிங்கப்பூரில் மே 27 ஆம் தேதி ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு செடான் காரும் மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட கார் விபத்து ஏற்பட்டுள்ளது.

SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கத்தில் இந்த பரபரப்பான விபத்து குறித்த காணொளி பதிவிடப்பட்டுள்ளது.

அந்த காணொளியில் காமன்வெல்த் அவன்யூ வெஸ்ட் சாலையில் வலதுபுறம் திரும்பிக் கொண்டிருந்த ஒரு காரின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுவது தெரிகிறது.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் ஓட்டுநர் சாலையில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.

மே 27 மாலை 6:00 மணி அளவில் . ஃபெடரல் வெஸ்ட் ரோடு மற்றும் கிளமென்டி 2-வது ரோடு சந்திப்பில் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு காயமடைந்து கிடந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சிகிசைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தேசிய பல்கலைக்கழகமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தங்களின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK