சாலையோரம் குவிந்து கிடந்த மின் சிகரெட்டுகள்...!!எங்கு..?? எதனால்..?? தெரிந்து கொள்ள இந்த முழு பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!
சிங்கப்பூர்: மலேசியாவில் மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, ஜோகூர்–சிங்கப்பூர் காஸ்வே வழியாக சாலையோரங்களில் பல மின்-சிகரெட்டுகள் தூக்கி எறியப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து TikTok இல் @pupala2177 என்ற பயனர் வெளியிட்ட வீடியோவில், ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் சாலையோரத்தில் சிதறிக் கிடந்த மின்-சிகரெட்டுகள் தென்பட்டன. அந்த காணொளி 2.6 லட்சம் முறை பார்க்கப்பட்டு இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே சூடான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியா சமீபத்தில் மின்-சிகரெட்டுகள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் அவற்றை வைத்திருப்போர், பயன்படுத்துவோர் அல்லது வாங்குவோர் மீது கடுமையான அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும். மூன்றாவது குற்றம் செய்தால், $2,000 வரை அபராதம் மற்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்வர்.
மேலும், எட்டோமிடேட் கொண்ட மின்-சிகரெட்டுகள் அதிகாரப்பூர்வமாக “வகுப்பு C” மருந்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துபவர்கள் நீதிமன்ற விசாரணையுடன், கடத்துவோர் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கும் 5 பிரம்படிகளுக்கும் உள்ளாக நேரிடலாம்.