ஆரம்பகால குழந்தை பருவக் கல்வி..!! ஆதரவளிக்கும் ECDA ..!!
சிங்கப்பூர் : உள்ளூர் பெற்றோர்கள் சிறார் கல்வி மையங்கள் மீது அதிக ஒட்டுமொத்த திருப்தியை கொண்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. ஆனால் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் பார்வைகளுக்கு இடையே ஒரு இடைவெளி காணப்படுகிறது.
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை விட அவர்களின் கல்வி செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள்.
இதை சரி செய்வதற்கு ஆரம்பகால குழந்தை வளர்ச்சி அமைப்பு (ECDA) பெற்றோர்களுக்கும், சிறார் கல்வி மையங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுபடுத்த சில வழிகாட்டுதல்களை உருவாக்கியிருக்கிறது.
ECDA இன்று (மே 9) இஒரு கணக்கெடுப்பு முடிவுகளை அறிவித்துள்ளது.இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க சிறார் கல்வி மையங்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், கூடுதல் விவரங்கள் இந்த ஆண்டின் (2020) பிற்பகுதியில் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதம் சுமார் 1,800 பெற்றோர்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 95% பேர் சிறார் கல்வி மையங்களில் பாதுகாப்பு தரங்களில் திருப்தி அடைந்ததாகவும், 89% பேர் சிறார் கல்வியின் தரம் மற்றும் கல்வியாளர்களுடனான தங்கள் உறவின் தரத்தில் திருப்தி அடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் 91% குழந்தைகளின் கற்றல் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வில் கல்வியாளர்கள் ஒரு முக்கிய பங்கு வகைப்பதாகவும் கூறியதாக ECDA தெரிவித்துள்ளது.
33% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை வளர்ப்பதை விட அவர்கள் கல்வி ரீதியாக தயார்படுத்துவதே முக்கியம் என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் விளையாட்டை விட கல்வி கற்பதை மிகவும் முக்கியம் என்று நம்புவதாக கூறியுள்ளனர்.
இருப்பினும் விளையாட்டின் மூலம் சமூக மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு முழுமையான வளர்ச்சி என்பது ஆரம்பகால குழந்தை பருவ கல்வியல் மிக முக்கியமானது என்று சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.