சிங்கப்பூரில் வீட்டு உரிமையாளரிடம் அத்துமீறிய எலக்ட்ரீசியன்..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீட்டு பல்புகளை சரிசெய்யச் சென்ற எலக்ட்ரீஷியன், பெண் வீட்டு உரிமையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், உடலுறவு சம்மதத்துடன் நடந்தது என்ற அவரது கூற்றை நீதிபதி நிராகரித்தார்.
49 வயதான பிரதிவாதி கோ லீ ஹ்வா, 2021 ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்டவரின் HDB வீட்டில் பல்புகளைப் பழுதுபார்க்கச் சென்றபோது குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கில் பிரதிவாதியின் விளக்கம் முரண்பாடானதாக இருந்தது என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் விதிவிலக்காக நம்பகமானது என நீதிபதி கூறினார்.
2015 ஆம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டுப் புதுப்பிப்பிற்காக பிரதிவாதியை வேலைக்கு அமர்த்தியிருந்தார். அதன்பின் அவ்வப்போது சிறிய பழுதுபார்ப்புகளுக்காக அவரைத் தொடர்பு கொண்டிருந்தார். ஆனால் குற்றச்செயலுக்கு முன் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை.
2021 ஆகஸ்ட் 21 அன்று பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்அப் மூலம் பிரதிவாதியை அழைத்து வீட்டில் பல்புகளைச் சரிசெய்யுமாறு கேட்டார். 23 ஆம் தேதி பிரதிவாதி அவரது வீட்டிற்குச் சென்றபோது குளியலறை விளக்கை சரிசெய்தபின் வாழ்க்கை அறையில் இருக்கும் ஒரு சுவிட்சை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பின்பு பிரதிவாதி அநாகரீகமாக அவளுடைய சம்மதமின்றி அவளை கட்டிப்பிடித்தார். இதனால் அவள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்தாள். அவள் அவனைத் தள்ளிவிட்டு தன் படுக்கையறைக்கு ஓடினாள்.
பாதிக்கப்பட்ட பெண் உடனே தனது இரண்டு தோழிகளுக்கு என்ன நடந்தது என்றும், தான் பயந்துவிட்டதாகவும் குறுஞ்செய்தி அனுப்பினாள். வேலையை முடித்த பிறகு, பிரதிவாதி அவளை படுக்கையில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்தான். பாதிக்கப்பட்டவர் பிரதிவாதியை நிறுத்தும் முயற்சியில் கடித்தார்.விசாரணையின் போது பிரதிவாதி இது ஒரு விளையாட்டு என்றும் இது சம்மதத்துடன் நடந்தது என்றும் வாதிட்டார்.
ஆனால் நீதிபதி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலமும் அவரது நண்பர்களின் சாட்சியங்களும் உறுதியானவை என்று கூறி பிரதிவாதியின் கூற்றை நிராகரித்தார். நீதிபதி மேலும் ஒரு பெண் தனது பழுதுபார்ப்பு ஒப்பந்தக்காரருடன் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட விரும்புவது சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார். பிரதிவாதிக்கு எதிரான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும். இந்த குற்றத்திற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.