உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!!

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast' நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!!

சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு. கே. சண்முகம், பிரபல ஊடகவியலாளர் மற்றும் பேச்சாளர் திரு கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளார்.

1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிறிய நாடாக இருந்தது சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உலகின் மிக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per capita) கொண்ட நாடுகளில் ஒன்றாக அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணமாக, நாட்டின் முதல் தலைமுறை தலைவர்கள் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வை, நேர்மையான நிர்வாகம், உலகத் தரமான கல்வி முறை, வலுவான அடிப்படை கட்டமைப்பு மற்றும் திறமையை மையமாகக் கொண்ட கொள்கைகள் என்பதை அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் பிரதமர் லீ குவான் யூ உள்ளிட்ட முதல் தலைமுறை தலைவர்களின் நீண்டகால திட்டமிடல் மற்றும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்திய நிர்வாக அணுகுமுறையே, சிங்கப்பூரை உலக நாடுகளுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நேர்காணல் ஜூன் 2026-ல் வெளியான ‘The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தற்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த தகவல்கள், அந்த அதிகாரப்பூர்வ நேர்காணலில் அமைச்சர் கே. சண்முகம் பகிர்ந்த கருத்துகளின் சுருக்கமாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.