வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை – உதவிய சிங்கப்பூர்..!!

வெள்ளத்தில் மூழ்கிய இலங்கை - உதவிய சிங்கப்பூர்..!!

இலங்கையில் சமீபத்தில் “தித்வா” புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மேலும் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த பெயரிடர் காலத்தில் இலங்கைக்கு நிவாரணம் முயற்சிகளை வழங்குவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது மக்களின் நன்கொடைகளை கேட்டுள்ளது.

இந்த பெரும் மழையினால் சுமார் 20,000 மேற்பட்ட வீடுகள் முழுவதும் அழிந்து உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் அமைப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன என்ற செய்திகள் வெளியாகின.

எனவே முதற்கட்ட உதவிக்கரமாக சிங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு $50,000 நன்கொடை வழங்கியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK