கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி..?? விபத்தில் சிக்கிய ஓட்டுனர்..!!

சிங்கப்பூரில் இன்று (மார்ச் 24ஆம் தேதி) காலை ஹௌகாங் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டது. குப்பை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். ஹவுகாங் அவன்யூ 3 மற்றும் ஹவுகாங் தெரு 12 சாலையின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாயா லெபார் மற்றும் சாங்கித் தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு படையினர், பேரிடர் நிவாரண மீட்புக் குழுவினர் இணைந்து இன்று (மார்ச் 24) காலை 05:05 மணி அளவில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த விபத்தில் மோதலின் காரணமாக உள்பக்கமாக அமுங்கி இருந்த டேஷ் போர்டு மற்றும் ஸ்டியரிங் சக்கரத்தை வெளிப்புறமாக இருப்பதன் மூலமாக அவர்கள் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களை பயன்படுத்தி ஓட்டுனரை மீட்பதற்காக இடைவெளியை உருவாக்கினர்.

பேரிடர் நிவாரண குழுவினர் வாகனத்திற்குள் நுழைந்து ஓட்டுநர் இருக்கையின் கீழ் பகுதியை உபகரணங்களை பயன்படுத்தி இடைவெளியை உருவாக்கியும் வாகனத்தில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்பு படையினர் மீட்டனர்.

உடனே ஓட்டுனர் சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK