Zoo-வில் சந்தோஷ செய்தி… !!புது வரவிற்கு பெயர் சூட்டுங்கள்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குதிரை ஆண்டை வரவேற்கும் விதமாகவும், சர்வதேச வரிக்குதிரை தினத்தை முன்னிட்டும், சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை புதிதாகப் பிறந்த கிரேவியின் வரிக்குதிரை குட்டிக்கு பெயரிடும் போட்டியைத் தொடங்கியுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்று குட்டிக்கு ஏற்ற பெயரைத் தேர்வு செய்ய பொதுமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அமரி – வலிமை, தைரியம் மற்றும் புத்தாண்டின் உயிர்ச்சக்தியை குறிக்கும் பெயர்.சனா – அழகு, ஒளி மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தும் பெயர்.
காரி – குடும்பத்தின் புதிய உறுப்பினராக குட்டியின் மதிப்பை உணர்த்தும் பெயர். இந்த பெயர்களில் ஏதேனும் ஒன்றை பொதுமக்கள் தேர்வு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் கருத்துகள் பிரிவில் விருப்பமான பெயரை பதிவிட்டு பொதுமக்கள் வாக்களிக்கலாம். வாக்கெடுப்புக்கான கடைசி தேதி இந்த மாதம் 15 ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த ஊடாடும் நிகழ்வு, அழிந்து வரும் கிரேவியின் வரிக்குதிரை குறித்த விழிப்புணர்வை வளர்க்கும் என்றும், வரிக்குதிரை குட்டியின் பிறப்பின் மகிழ்ச்சியை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்கும் என்றும் மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.