சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!!

சிங்கப்பூர் AYE இல் பயங்கர விபத்து..!! விபத்தில் சிக்கிய 11 பேர்..!!

சிங்கப்பூர்: ஆயா ராஜா விரைவுச் சாலையில் (AYE) பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (மே 19) அதிகாலை ஆயர் ராஜா விரைவுச் சாலையில் பல வாகனங்கள் மோதி கொண்டதில் நடந்த சாலை விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

அந்த காணொளியைப் பதிவேற்றியவர் தனது பதிவில் குறைந்தது 11 இருசக்கர வாகனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

சாலைகள் அபாயகரமான நிலையில் உள்ளன எனவும் தயவு செய்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள் எனவும் கூறியுள்ளார். வேகத்தைக் குறைத்து பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நேற்று (மே 19) காலை சுமார் 6.35 மணி அளவில் கடலோர விரைவு சாலைக்கு (MCE) செல்லும் ஆயா ராஜா விரைவுச்சாலையின் (AYE) பகுதியில் ஒரு விபத்து நடந்துள்ளதாக தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 11 நபர்களில் 2 பேரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கும் மற்ற 9 பேரை ங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக SCDF வீரர்கள் கூறியுள்ளனர்.

விபத்து குறித்த முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் இந்த விபத்தில் 9 மோட்டார் சைக்கிள்களும் 2 கார்களும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காவல்துறை கூறியுள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK