இதனை அடுத்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. இந்நேரத்தில் தமிழகத்தில் தேர்தலையொட்டி மது கடைகளை நான்கு நாட்களுக்கு மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடைபெறுவதையும் உறுதி செய்யும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 23, அதற்கு முன்பாக ஏப்ரல் 21 22 ஆகிய இரண்டு நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ஆம் தேதியும் மொத்தமாக சேர்த்து நான்கு நாட்கள் மது கடைகளை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர்களுக்கு மது கொடுத்து வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் இதன் மூலமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.