இந்த அறிவிப்பின் கீழ் அக்டோபர் மாதத்தில் இருந்து 2 முதல் 9 சதவீதம் வரையில் ஆசிரியர்கள் சம்பள உயர்வை பெற உள்ளனர்.
ஏறத்தாழ 33,000 கல்வி அதிகாரிகளுக்கும், 1,700 உதவி கல்வியாளர்களுக்கும், 1,100 மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த சம்பள உயர்வானது அளிக்கப்பட உள்ளது.
சம்பள உயர்வு குறித்து கல்வி அமைச்சர் டெஸ்மெண்ட் லீ கூறியதாவது: ஆசிரியர்கள் கல்வி அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ,சம்பள உயர்வுகளைத் தாண்டி புதியவற்றை கற்றுக்கொள்ளவும் , அதை மேம்படுத்தவும் கல்வி அமைச்சகமானது ஆசிரியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
2.சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவரான தனபால் குமார் இந்த முயற்சியானது முக்கியமான ஒன்று என்றும் ,மேலும் இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்கப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.
3.சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மை திருமன் இந்த சம்பள மாற்றத்தை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.