ஆறு துறைகளில் கைகோர்க்கும் இந்தியா- சிங்கப்பூர்..!!இது தொடர்பான முழு தகவலையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!
சிங்கப்பூர்: சுகாதாரம், மருந்துகள், மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட ஆறு முக்கிய துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது இந்தியா – சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மாநாட்டை முன்னிட்டு, சிங்கப்பூர் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தகம்-தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் தலைமையிலான தூதுக்குழு புது தில்லியை வந்தடைந்தது.
கான் கிம் யோங் கூறுகையில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையை சமாளிக்க குறைக்கடத்தி சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கம் அவசியம். பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையங்கள், செவிலியர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
அத்துடன், சிங்கப்பூரின் விநியோகச் சங்கிலி வலுவாகவும் இடையூறு இன்றி செயல்படவும், புதிய சந்தை வாய்ப்புகளை ஆராய்வதும், பொருட்கள் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் மாற்று வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்த கான் கிம் யோங், இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் பயனுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.