தெம்பனிஸ் MRT அருகே காயம் - போலீஸ் விசாரணை தொடக்கம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நேற்று(20.12.25)) மாலை ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாலை 5.55 மணியளவில் பல அவசர அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு காயமடைந்த ஒருவரைக் கண்ட போலீசார்,சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து உடனடியாக மருத்துவ உதவியை வழங்கினர்.சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், சம்பவ இடத்தில் இரத்தக் காட்சிகள் இருந்தது தென்படுகிறது.
காயமடைந்த நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள் 1800-255-0000 என்ற காவல்துறை அவசர எண்ணை அழைக்குமாறும், அல்லது www.police.gov.sg/i-witness இணையதளத்தின் மூலம் தகவல் வழங்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.மேலும் வழங்கப்படும் தகவல்கள் ரகசியமாக கையாளப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.