சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கம்..!! $46 மில்லியன் ஒதுக்கீடு செய்த ஜோகூர் அரசு..!!
ஜோகூர் : சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மலேசியாவின் ஜோகூர் மாநில அரசானது சுற்றுலாத்துறைக்கு 2025 ஆம் ஆண்டிலிருந்து,143.84 மில்லியன் ரிங்கிட்டிற்கும் (S$ 45.9)அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
மலேசிய அனைத்துலக வணிக மற்றும் கண்காட்சி நிலையத்தில் “மலேசிய சுற்றுலா, பயண முகவர் சங்கக் கண்காட்சி2026” (மாட்டா 2006) நடைபெற்று வருகிறது.
ஜோகூர் ஒற்றுமை, மரபுடைமை, பண்பாட்டுக் குழுவின் தலைவர் திரு. தேவன் குமார் அவர்கள் அந்த கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இந்த ஒதுக்கீடு குறித்த செய்தியை அறிவித்தார்.
உரையாடலில் அவர் கூறியதாவது: “விசிட் ஜோகூர் 2026” என்ற இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் இந்த நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டில் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக உள்ளூர் வாசிகளையும், சிங்கப்பூர் இந்தோனேஷியா போன்ற அண்டை நாட்டினரையும் ஈர்க்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயலானது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது எனவும், சென்ற ஆண்டில் (2025) மட்டும் 25 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வந்து சென்றதாக, ஜோகூர் குடிநுழைவுத்துறை தகவல் அளித்துள்ளது.
அதுபோலவே இந்த ஆண்டின் (2026) முதல் 2 மாதங்களில் மட்டும் 3.95 மில்லியன் பேர் ஜோகூருக்கு வந்துள்ளதாகவும் திரு ரேவன் குமார் அவர்கள் தெரிவித்தார்.