சிங்கப்பூர் கிடங்கில் பயங்கர தீ..! 800க்கும் மேற்பட்ட பார்சல்கள் சேதம்!

சிங்கப்பூரில் உள்ள தொழில்துறை கட்டிடத்தின் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பார்சல்கள் தீயில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில் Toh Guan Road East பகுதியில் உள்ள 9 மாடி தொழில்துறை கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிடங்குக்குள் அதிக அளவில் பார்சல்கள் மற்றும் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால், தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதுடன், தீ மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தீ விபத்தில் சுமார் 600 முதல் 800 பார்சல்கள் வரை தீயில் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீயை அணைக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீராலும் சில பார்சல்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்குப் பின்னர் கிடங்கில் பொருட்களை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் தங்களது பார்சல்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். சிலர் தங்களது பொருட்களைப் பெறுவதற்காக கிடங்குக்குச் சென்றபோதுதான் அவை தீ விபத்தில் சிக்கியிருப்பதை அறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பார்சல்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக கிடங்கு நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தகட்ட தகவல்களை வழங்கி வருகிறது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
