சிங்கப்பூரில் HDB குடியிருப்பில் நடந்த கொலை..!! 22 மலேசிய இளைஞர் மீது வழக்குப்பதிவு..!!
சிங்கப்பூரில் சோவா சூ ஹாங்கில் HDB குடியிருப்பில் மே 26 ஆம் தேதி நடந்த கொலை வழக்கு தொடர்புடைய 22 வயது மலேசிய இளைஞர் மீது இன்று (மே 28) நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது ஃபைஸ் பின் உங்மர் மீது செவ்வாய்க்கிழமை (மே 26) இரவு 8:553 மணிக்கு 92 மணிக்கு இடையில் சோவா சூ காங் அவன்யூ 2, பிளாக் 248, பிளாக் A-ல் உள்ள மின் தூக்கிக்குள், 21 வயதான சுவா பீ டிங் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றசாட்டின் படி தண்டனை சட்டத்தின் பிரிவு 302(1) -ன் கீழ், கொலை குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.
மே 26 ஆம் தேதி அன்று சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் 12 வது மாடியில் உள்ள லிப்டில் 21 வயது பெண் ஒருவர் சரிந்து விழுந்து இறந்த நிலையில் இருப்பதை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் அப்பெண்ணெக் கத்தியால் குத்தி உள்ளார்.
அதற்குப் பிறகு அவர் அதே HDB கட்டிடத்தின் 18 வது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவருக்கு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.