DCS சேவையாளர்களுக்கு புதிய வாய்ப்பு..!! நாடாளுமன்றம் உறுதி..!!

DCS சேவையாளர்களுக்கு புதிய வாய்ப்பு..!! நாடாளுமன்றம் உறுதி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தில் தற்காப்பு அமைச்சர் திரு.சான் சுன் சிங் தேசிய சேவையாளர்கள் வாழ்நாள் கல்வியை நோக்கிய திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஈடுபடுவது தொடர்பான கேள்வியை எழுப்பினார்.குறிப்பாக, DCS சேவை ஆளர்கள் முகாம் பயிற்சியில் ஈடுபட்டாலும் SkillsFuture பயிற்சியில் பங்கேற்பதற்கான அனுமதி உண்டா என சந்தேகம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த திரு ஜான், தேசிய சேவையாளர்கள் மற்ற ராணுவ பயிற்சிகளில் பங்கேற்பதை தற்காப்பு அமைச்சகம் ஊக்குவிப்பதாக கூறினார்.

மேலும் முகாம்களுக்கு அழைக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே தேசிய சேவையாளர்களுக்கு தேவையான தகவல்கள் அனுப்பப்படும் என்று கூறினார்.

இந்த நடவடிக்கை,முகாமில் பயிற்சி மேற்கொள்வதோடு சேர்ந்து திறன் மேம்பாட்டு பயிற்சியில் தேசிய சேவையாளர்கள் சுலபமாக பங்கேற்க கூடிய சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்த முயற்சிகள், தேசிய சேவையாளர்களின் திறன் மேம்பாட்டை மட்டுமல்லாமல், அவர்களின் தொழில் வாழ்வையும் பலப்படுத்தும் நோக்கில் இருக்கின்றன.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK