கழிவு நீர் ஆய்வுகளுக்கு புதிய தொழில்நுட்பம்..!! SUTD கண்டுபிடிப்பு..!!
செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தினால் சில பேர் வேலையை இழக்க நேரிடுமோ என்ற பயத்தில் உள்ளனர். ஆனால் சில வேலைகளை மனிதர்கள் செய்வதை விட இயந்திரங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு கருவிகள் செய்தால் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டிற்கு கழிவுநீர் ஆய்வு போன்ற பணிகளுக்கு மனிதர்களைப் பயன்படுத்துவதால் ஆபத்தான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
பாதாளச் சாக்கடைகளுக்குள் நச்சு காற்றும், மறைவான வளைவுகளும் இருக்கும். அவற்றில் அடைப்புகள், விரிசல்கள் மற்றும் கட்டமைப்பு சேதம் ஆகியவை உள்ளனவா என்பதை கண்டறியத் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சிங்கப்பூரில் வழக்கமான ஆய்வுகளுக்கு பழுது பார்ப்புப் பணிகளுக்கும் தேவைப்படுகின்ற 3,600 கிலோமீட்டர் நீளமுள்ள பொதுக் கழிவுநீர் வடிகால்களையும் , மனிதர்கள் நுழையக்கூடிய 1,00,000 துளைகளையும் தேசிய தண்ணீர் அமைப்பான பியுபி பராமரித்து வருகிறது.
இந்த கருவியானது குறுகலான பகுதிக்குள் நிகழ் நேரக் காட்சிகளை வழங்கி பாதுகாப்பான தொலைவில் இருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோகன் ராஜேஷ் எலாரா மற்றும் அவரது குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பணியிட ஆபத்துகளை அகற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அணுகுமுறைக்கு மாற வேண்டும் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் உணர்த்துவதாக பேராசிரியர் மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிக ஆபத்துகள் உள்ள செயல்பாடுகளில் இயந்திரவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் தனியாக்கம் போன்றவற்றை நேரடியாக ஒருங்கிணைப்பது பாரம்பரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அப்பால் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேறி செல்கிறது என்பதை பிரதிபலிப்பதாக அவர் கூறியுள்ளார்.