பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!!

பரிதவித்து நிற்கும் Jetstar Asia ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி!!

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் Ng Chee Meng கூறுகையில், Jetstar Asia ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலு ஊழியர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை வழங்க சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சாங்கி விமான நிலையக் குழுமம் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார்.

ஊழியர்களுக்கான பணிநீக்க இழப்பீடு முத்தரப்பு கூட்டணியின் வழிகாட்டுதலின்படி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் Jetstar Asia ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்பாடு செய்யவும் முயற்சி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் மற்றும் e2i அமைப்பு நேரடி ஆதரவை வழங்கப்போவதாகவும் அவர் கூறினார்.