தனியாரை தவிர்த்து அரசு மருத்துவமனைகளை நாடும் மக்கள்…!! காரணம்..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிய விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் குறைந்தபட்ச செலவை ஈடுகட்ட முடியாமல் இருப்பதால், அதிகமான மக்கள் தனியார் மருத்துவமனைகளிலிருந்து பொது மருத்துவமனைகளுக்கு மாறி வருகின்றனர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே காங் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் கூறியதாவது, 2010 இல் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் விகிதம் 15% இருந்தது, ஆனால் 2020-க்கு வந்து 10% மட்டுமே இருந்தது.அதே சமயம் பொது மருத்துவமனைகளில் நோயாளிகள் 85% இருந்து 90% ஆக அதிகரித்தனர்.
“முக்கிய காரணங்களில் ஒன்று தனியார் மருத்துவச் செலவுகள் தொடர்ச்சியாக உயர்ந்து வருவது. ஒருங்கிணைந்த மருத்துவக் காப்புறுப்பு திட்டத்தின் கூடுதல் காப்பீடு அதிக மருத்துவ சேவைகள் வழங்கப்படுவதையும், மருத்துவ வளங்களை அதிகமாக பயன்படுத்தப்படுவதையும் தூண்டுகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகளுக்கான துணை காப்பீட்டு பிரீமியம் ஆண்டுதோறும் சுமார் 17% அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் பாலிசி வைத்தோர் தங்கள் துணை காப்பீட்டை ரத்து செய்கிறார்கள் அல்லது தரமிறக்குகிறார்கள்.
புதிய விதிகள் பாதுகாப்பை பாதிக்கவில்லை, மாறாக, மருத்துவ காப்பீடு அதன் அசல் நோக்கத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறது. புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, பத்து பேரில் ஆறு பேர் தங்கள் மெடிசேவ் சேமிப்பை ரொக்கமாக செலுத்தாமலே பயன்படுத்த முடியும் என்றும், பெரும்பாலோர் $1,000 ஐத் தாண்டாது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.