எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..??

எரிபொருள் விலைகள் உயர்வு..!! பாதிப்பு யாருக்கு..??

சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (SNEF) ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.

இந்த கணக்கெடுப்பில் தற்போது அதிகரித்து வருகின்ற எரிபொருள் விலைகளால் பெரும்பாலான வணிகங்கள் அதிக இயக்க செலவுகளை எதிர்கொண்டு வருவதையும் சுமார் பாதிக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் செலவுகளால் ஏற்படும் கூடுதல் அழுத்தங்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளதை தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 10 முதல் 16 வரை இந்த கணக்கெடுப்பானது நடத்தப்பட்டது. இதில் உற்பத்தி சேவை மற்றும் கட்டுமான துறைகளில் உள்ள 210 நிறுவனங்களிடமிருந்து கருத்து சேகரிப்பு நடந்தது.

இதில் 96 சதவீதம் பேர் இயக்கு செலவுகள் அதிகரித்துள்ள கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவர்களில் 36 சதவீதம் பேர் 1% முதல் 10% வரையிலும், 41 சதவீதம் பேர் 11% முதல் 25% வரையிலும், 19% பேர் 25% க்கும் அதிகமான செலவு அதிகரிப்பு பற்றி கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமாக பயன்பாட்டுச் சேவைகள் எரிபொருள் மூலப்பொருட்கள் மற்றும் தளவாடங்கள் ஆகியவை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட செலவினங்களில் அடங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

தற்போது அதிகரித்து வருகின்ற எரிபொருள் விலையால் மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவுகளைக் கடந்து, கொள்முதல் போக்குவரத்து மற்றும் தினசரி வருகின்ற இயக்க செலவுகளை மேலும் அதிகரிப்பதாக பல வணிகங்கள் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக, உணவகங்கள், உணவு மற்றும் சில்லறை விற்பனை தொழில்கள் அதிகரித்து வரும் தற்காலிக தொழிலாளர் செலவுகளில் அழுத்தங்கள் உணரப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை பொருத்தவரையில் தற்போது அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக 83 சதவீதத்தினர் வணிகங்கள் இன்னும் தங்கள் பணியாளர்களையோ அல்லது பணி ஏற்பாடுகளையும் சரி செய்ய முடியவில்லை எனவும் கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏற்கனவே எதிர் நடவடிக்கைகளை எடுத்துள்ள 17 சதவீத நிறுவனங்களில் மிகவும் பொதுவான நடைமுறைகளில் ஆள்சேர்ப்பை நிறுத்துதல் அல்லது விரிவாக்க திட்டங்களை தற்போதைய நிலைக்கு ஒத்தி வைத்தல், ஊழியர்களை வேறு பணிகளுக்கு மாற்றுதல் மற்றும் இயல்பான பனி விலகல் மூலமாக பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போது கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

ஊழியர்கள் வேலையை விட்டு விலகும் போது ஓய்வு பெறும்போது அல்லது அவர்களுடைய ஒப்பந்தங்கள் காலாவதியாகி புதுப்பிக்கப்படாத போது சில நிறுவனங்கள் போனஸ்கள் படிக்காசுகள் மற்றும் சலுகைகளையும் தற்போது குறைத்து வருகின்றன. மேலும் வேலை நேரம் மற்றும் கூடுதல் வேற ஊதியத்தை தற்போது குறைத்துள்ளனர்.

அடுத்த வரும் 12 மாதங்களில் எரிபொருள் விலைகள் அதிகமாகவே இருந்தால் நிறுவனங்கள் மூன்று முக்கிய பகுதிகளில் ஆதரவை பெறுவதற்கு பெரிதும் எதிர்பார்த்து உள்ளது.
முதலாவது: வரிச்சலுகைகள் அல்லது நிதியுதவி போன்ற வணிகச் செலவு ஆதரவு
இரண்டாவதாக: எரிசக்தி மானியங்கள் அல்லது கட்டண குறைப்புகள்
மூன்றாவது: வணிகச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் மனித வள கொள்கைகளில் மாற்றங்களை தற்போதைய நிலையில் ஒத்தி வைத்தல்.

நிறுவனங்கள் அவர்களின் எதிர்காலத்தை குறித்து எச்சரிக்கையாகவே இருப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்களில் 39 சதவீதத்தினர் அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் தங்களுடைய வணிகம் குறித்த எதிர்மறை கண்ணோட்டங்களையும் பெற்றுள்ளன.


தற்போதைய செலவு அழுத்தங்களுக்கு மேலாக உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் வணிகச் சூழலை மேலும் நிலைகுலைய வைப்பதாகவும் பல முதலாளிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK