தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உடன் இணைந்த தொழிற்சங்கங்கள்..!!எதற்காக..??
சிங்கப்பூரின் தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (NTUC) கீழ் உள்ள சுகாதார சேவைகள் ஊழியர் சங்கம் (HSEU) மற்றும் சில பொது மருத்துவர்களை அடையாளப்படுத்தும் வகையில் GP+ கூட்டுறவு ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
GP+ கூட்டுறவுக்குள் சிறு வணிக மருத்துவமனைகளை நடத்தும் பொது மருத்துவர்களுக்கு HSEU ஆதரவளிக்கும்.
HSEU மருத்துவமனைகளின் களப்பணியாளர்களுக்கு தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை வழங்கவுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு (A1) குறித்த அறிவாற்றல் பயிற்சியும் அடங்கும்.
மேலும் NTUC – இன் பெருநிறுவனப் பயிற்சிக் குழுவின் நிதி உதவி மூலம் GP+ கூட்டுறவின் உறுப்பு மருத்துவமனைகள் புதிய நூலில் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதற்கும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் HSEU உதவ உள்ளது.
பல GP+ உறுப்பு மருத்துவமனைகள் தங்கள் ஊழியர்களுக்கான அடையாள சங்கமாக HSEU – வை அங்கீகரித்துள்ளன. இதன் மூலம் பயிற்சி ஊழியர் நலன்கள் மற்றும் பணியிடம் ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏப்ர 13ஆம் தேதி அன்று கையெழுத்தானது.
மருத்துவச் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மருத்துவமனை செயல்பாடுகளை நிர்வகிக்கவும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் பராமரிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்தவும், சவால்களை எதிர்கொண்டு அதிகமான மருத்துவர்கள் ஆதரவுக்காக NTUC-யை நாடி வருகின்றனர்.
NTUC – இன் பொதுச் செயலாளரான சீ மெங் இது குறித்து கூறியதாவது: செயற்கை நுண்ணறிவு மாற்றத்தில் மருத்துவர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம்.
ரென் சி மருத்துவமனை மற்றும் GB+ கூட்டுறவு உள்ளிட்ட வேலை வழங்கு 3ர்களுடன் தொடர்ந்து பணியாற்றி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நடைமுறை உதவிகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரென் சி மருத்துவமனை, சுகாதார சேவைகள் ஊழியர் சங்கத்தை மருத்துவமனையில் உள்ள 1000 -க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களை அடையாளப்படுத்தும் ஒரு தொழிற்சங்கமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.