சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இணையத்தில் பரவும் வீடியோ..!!
சிங்கப்பூரில் மே 25ஆம் தேதி அன்று அப்பர் தாம்சன் சாலையில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. வழி மாறிய ஒரு காரைத் தவிர்ப்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென திரும்பிய போது சறுக்கியதில் சாலையோரத்தில் அது மோதியுள்ளது.
இந்த குறித்த வீடியோ பதிவானது SGRV என்ற Facebook சமூக ஊடக பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த பதிவில் மே 25ஆம் தேதி அன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெஸ்ட்லேக் அவன்யூ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த வீடியோ பதிவில் மோட்டார் சைக்கிள் முதலில் இடதுபுற பாதையில் அதிவேகமாக செல்வது தெரிகிறது. பின்பு ஒரு சாம்பல் நிற கார் திடீரென நடுப் பாதையில் இருந்து இடதுபுற பாதைக்கு மாறியது. அந்த காரை தவிர்ப்பதற்காக அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் திடீரென வாகனத்தை திருப்பி உள்ளார்.
அதில் அவர் சறுக்கிய நிலையில் சாலையோரப் புதர்களில் விழுந்து உள்ளார். இருப்பினும் அந்த கார் நிற்காமல் தொடர்ந்து முன்னோக்கி செல்வதும் அந்த பதிவில் தெரிகிறது.
மே 25ஆம் தேதி இரவு சுமார் 7:40 மணியளவில் அப்பர் தாம்சன் சாலையில் இருந்து செம்பாவாங் சாலையை நோக்கிச் செல்லும் வழியில் வழுக்கி விழுந்ததாக நம்பப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து நிகழ்ந்துள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்று காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் 30 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினையுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேலும் 37 வயதுடைய கார் ஓட்டுநர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றார். காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (மே 25) மாலை தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை சி ஜே காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) தெரிவித்துள்ளனர்.