சிங்கப்பூரில் பரபரப்பு..!! தீ வைப்போம் என மிரட்டிய 2 பேர் கைது..!
சிங்கப்பூரில் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு வர்ணம் பூசி சொத்துக்களை சேதப்படுத்திய மற்றும் தீ வைப்போம் என மிரட்டல் விடுத்த சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் மற்றும் 22 வயதுடைய பெண் ண் இருவரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
இது குறித்து ஆகஸ்ட் 2 அன்று அதிகாலை 2:00 மணி முதல் காலை 10:00 மணி வரை நாடு முழுவதும் பல கந்து வட்டிக்காரர்களின் தொல்லை வழக்குகள் குறித்த புகார் தங்களுக்கு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பல குடியிருப்பு பகுதிகளின் கதவுகள் மற்றும் வாயில்கள் வெள்ளை, கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு வர்ணங்களால் சேதப்பட்டு இருந்தன. மேலும் கடன் வசூல் குறிப்புகள் கதவுகளில் ஒட்டப்பட்டு இருந்தன.
அதில் இணைக்கப்பட்டுள்ள படங்களில் இது வெறும் ஆரம்பம் தான்! இன்று வர்ணம் அடுத்த முறை நான் எப்படி தீ வைக்கிறேன் என்று காட்டுகிறேன்! இதை தீர்க்க விரும்பினால் உடனடியாக என்னை மீண்டும் அழையுங்கள் என்ற வசனம் எழுதப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கந்துவட்டி சட்டத்தின் கீழ், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி, முதல் முறை இந்த குற்றம் செய்பவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 3 முதல் 6 பிரம்படிகள் வரை வழங்கப்படும்.
சட்டவிரோத கந்துவட்டி தொழிலுக்கு உதவுபவர்கள் அல்லது இது போன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.