PWC- வின் அறிக்கையின்படி, 67% சிங்கப்பூர் நிறுவனங்கள் Al முதலீடுகளில் அதிக விருப்பம் காட்டுகின்றன. இந்த மதிப்பு உலக சராசரியை விட 41% அதிகமாகும்.
அதே நேரத்தில் 63% உள்ளூர் நிறுவனங்கள் Al வழங்கும் வாய்ப்புகளின் அடிப்படையில் மனித வளங்களையும், மூலதனத்தையும் ஒதுக்குகின்றன. இது உலக சராசரியை விட 51% அதிகமாகும்.
கடந்த ஆண்டு (2025) ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட உலகளாவிய செயல் திறன் ஆய்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த 30 பேர் மற்றும் பெரிய உலகளாவிய நிறுவனங்களைச் சேர்ந்த 1200க்கும் அதிகமான மூத்த நிர்வாகிகள் நேர்காணல் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஆண்டு வருமானம் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ள நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் .
Al பயன்பாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் உலக சராசரியை விட சிறப்பாக செயல்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 43% உள்ளூர் நிறுவனங்கள் பல்வேறு தொழில்துறைகளுக்கு இடையேயான போட்டிக்கு Al-யைப் பயன்படுத்துகின்றனர். இது உலக சராசரியை விட 20%அதிகமாகும்.
இருப்பினும் உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை விட சிங்கப்பூர் இன்னும் பின்தங்கியுள்ளது என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.
சிங்கப்பூர் வணிகங்களில் சுமார் 40% மட்டுமே சீரான மற்றும் நம்பகமான பதிவுகளைக் கொண்டுள்ளன. உள்ளூர் நிறுவனங்களில் 37% மட்டுமே கருவிகளை சேர்ப்பதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவை மறுசீரமைத்துள்ளன.
தேசிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிற்கான சிங்கப்பூரின் உந்துதல் ஆனது, உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தலைவர்களுடனான இடைவெளியைக் குறைக்க வணிகங்கள் செய்லாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாகவும் PWC அறிக்கையில் தெரிவித்துள்ளது.