சிங்கப்பூர் நபருக்கு சிறைத்தண்டனை..!!! இத்தனை ஆண்டுகளா? ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

2019 அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7:30 மணி வரை மலாக்கா தெங்கா மாவட்டத்திலுள்ள தாமான் மெர்டேகா ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி நோர்பசீரா பிடின்(27) மற்றும் அவரது மகன் முகமது இமான் அஷ்ரஃப் அப்துல்லாஹ்(11) ஆகியோரின் மரணத்திற்கு காரணமானதாக ஷாருல் மீது இரண்டு கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
மலேசிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் கொலை குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவித்திருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படலாம் எனவும் அந்த ஆண்டு (2019) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கான காரணம், குடும்ப பிரச்சனைகள் தொடர்பாக தம்பதியினரிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் என உள்ளூர் ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டு இருந்தன. பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்று விடுவதாக மிரட்டிய போது ஷாருல் ஆத்திரமடைந்த அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தை வளர்ப்பு மகன் நேரில் பார்த்திருப்பதை கவனித்ததும் 11 வயது சிறுவனையும் அவனால் கத்தியால் குத்தினார்.
இந்த சம்பவம் குறித்து மலாக்கா உயர் நீதிமன்ற நீதிபதி அன்செல்ம் சார்லஸ் பெர்னாண்டிஸ் 36 வயதான ஷாரூன் நிஜாம் சுரைமிக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்காகவும் 36 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகள் அக்டோபர் 11, 2019 அன்று அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக இயங்கும் எனவும் கூறியுள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மலாக்காவில் தனது மனைவி மற்றும் வளர்ப்பு மகனின் உடல்களை கொன்று உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி பின்னர் குடியரசிற்கு தப்பிச்சென்ற சிங்கப்பூர் நபருக்கு மலேசிய நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) தீர்ப்பளித்துள்ளது.
மலேசிய நீதிமன்றம் கூறிய தீர்ப்பு: 72 ஆண்டுகள் சிறை தண்டனையும் 24 பிரம்படிகளும் கொலைக்குற்றவாளிக்கு தண்டனையாக அறிவிக்கப்பட்டுள்ளது
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
