சிங்கப்பூரின் புகழ்பெற்ற வணிக கட்டிடம் விற்பனை..!! ஏன்..??

சிங்கப்பூரின் புகழ்பெற்ற வணிக கட்டிடம் விற்பனை..!! ஏன்..??

சிங்கப்பூரின் புகழ்பெற்ற வணிக கட்டிடமான “Asia Square Tower 2” – வை விற்பனை செய்துள்ளதாக சிங்கப்பூரின் முதல் மற்றும் மிகப்பெரிய வர்த்தக அசையா சொத்து முதலீட்டு அறக்கட்டளை கேபிடல் லேண்ட் இண்டெகரேட்டர் கமர்ஷியல் டிரஸ்ட் (CAPT) தெரிவித்துள்ளது.

Asia Square Tower 2 சிங்கப்பூரின் நவீன வணிக வளர்ச்சிக்கும், உயர்தர அலுவலக வசதிகளுக்கும் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

CAPT இந்த கட்டிடத்தை 2017 ஆம் ஆண்டு முதல் தன்வசம் வைத்துள்ளது.

இந்நிலையில் Asia Square Tower 2 – வை ஐஓஐ மெரினா வியூ எஸ்.டி.என் பி.எச்.டி
நிறுவனத்திற்கு சுமார் S$2.5 பில்லியனுக்கு விற்பனை செய்துள்ளது.

அதன் மூலம் வரும் வருமானத்தை பாரகான் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யப்பட போவதாக CAPT அறிவித்துள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள குஸ்காடென் பீக் பாரகனை S$ 3.9 பில்லியனுக்கு வாங்க உள்ளதாகவும் CAPT கூறியுள்ளது.

சில்லறை வணிகம், அலுவலகம் மற்றும் மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய முழு உரிமைத் திட்டமான PARAGON , கையகப்படுத்துதல் முடிந்தவுடன் ஒரு யூனிட்டிற்கான ஈவுத்தொகையை 2.1% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், சிங்கப்பூரில் மிகப்பெரிய தனியார் சொத்து உரிமையாளராக CAPT சந்தை முன்னிலை வகிக்கும் என்றும் CAPT இன்று (ஏப்ரல் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள பாரகான் இந்த ஆண்டு (2026) ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, அதன் சில்லறை விற்பனைப் பிரிவுகள், மருத்துவ மற்றும் அலுவலக இடங்கள் அனைத்திலும் 100% நிரம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை மற்றும் கையப்படுத்தலுக்குப் பிறகு உத்தேச மொத்த கடன் விகிதம் 3.9.2% இருந்தது எனவும், இது 50% ஒழுங்குமுறை உச்ச வரம்பிற்கு குறைவாகும் எனவும் CAPT குறிப்பிட்டுள்ளது.

பாரகனின் பரிவர்த்தனை செலவுகளை, கடன் நிதி மற்றும் ஆசியா ஸ்கொயர் டவர் 2-வின் விற்பனையிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் ஆகியவற்றின் மூலம் ஈடு செய்ய CAPT திட்டமிட்டுள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK