சிங்கப்பூரில் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தல்..!! மலேசியருக்கு சிறைத் தண்டனை..!!
சிங்கப்பூரில் மின் சிகரெட் சாதனங்கள் போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கடத்திய குற்றத்திற்காக மலேசியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மின் சிகரெட் சாதனங்கள் உட்பட 37,000 பொருள்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்த குற்றத்தின் பெயரில் ஜெகதீஸ்வரன் நாகலிங்கம் என்ற 28 வயதுடைய மலேசியருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
” டேவிட் ” என்னும் பெயர் கொண்ட அந்த நிறுவன அதிகாரி சிங்கப்பூருக்கு சில சட்ட விரோதப் பொருட்களைக் கொண்டு சென்றால் பணம் தருவதாக அந்த நபரிடம் கூறியுள்ளார். அந்த நபரிடம் அந்த அதிகாரி அந்த பொருட்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 2- ஆம் தேதி அன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஜெகதீஸ்வரன் லாரி ஒன்றை துவாஸ் சோதனைச்சாவடியை நோக்கி ஓட்டி வந்தபோது, சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது அந்த லாரியில் சட்டவிரோதப் பொருட்கள் இருப்பதைக் கண்டு, ஜெகதீஸ்வரனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கானது நேற்று (ஏப்ரல் 16) நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. சட்டவிரோதப் பொருட்களைக் கடத்தியக் குற்றத்திற்காக ஜெகதீஸ்வரனுக்கு, 22 வார சிறைத் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.