சிங்கப்பூரில் நடத்தப்படும் நீச்சல் போட்டி..!!! யாருக்கு?

சிங்கப்பூரில் நடத்தப்படும் நீச்சல் போட்டி..!!! யாருக்கு?

ஆசியாவில் முதல் முறையாக டொயோட்டா நடத்தும் உலக கிண்ண நீச்சல் போட்டி சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் 75 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 600 நீச்சல் வீரர்கள் போட்டியிட உள்ளனர்.

இந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி வரை நீச்சல் போட்டி நடைபெறும்.

இந்த நீச்சல் போட்டியானது உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு நடத்தப்படுகிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த உடற்குறைபாடு உள்ள நீச்சல் வீரரான கொலீன் சூனுக்கு தொடக்க விழாவின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

நீச்சல் போட்டியின் மூலம் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையாகவும், இதன் மூலம் முன்னேற்றம் அடைய ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கலாச்சார சமூக இளைஞர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நீயோ கூறியுள்ளார்.


இந்த நீச்சல் போட்டி நடத்துவதன் மூலம் உடற்குறை உள்ளவர்களுக்கான விளையாட்டுகளின் மேம்பாட்டிற்காக நிறைய நாடுகள் ஆதரவளிக்கும் எனவும் திரு நியோ கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் 7 முறை தங்கம் வென்ற உடற்குறைபாடு உள்ள நீச்சல் வீராங்கனை யிப் பின் சியூ சிங்கப்பூரை சேர்ந்தவர்.

 

WHATSAPP CHANNEL LINK

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.