முதியவரின் அநாகரீகச்  செயல் …!

முதியவரின் அநாகரீகச்  செயல் ...!

சிங்கப்பூரில் முதியவர் ஒருவர் சக பெண் பயணியிடம் அநாகரீகச் செயலில் நடந்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவமானது  தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கு பகுதி நோக்கிச் செல்லும் 36B பேருந்தில் மார்ச் 12ஆம் தேதி அன்று இரவு 7 மணி அளவில் நடந்துள்ளது.

முதியவரின் அச்செயலால் பேருந்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து Go – Ahead சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது,

36B பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் தனது பொருட்களை இரண்டு இருக்கைகளில் வைத்திருந்தார்.

அப்போது பேருந்தில் ஏறிய ஒரு பெண்மணி இருக்கை வேண்டும் என்பதற்காக முதியவரின் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த முதியவர் அந்தப் பெண்ணைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளார்.மேலும் உடல் ரீதியாவும் அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.அதுமட்டுமல்லாது அப் பெண்ணின் கைபேசியைப் பறிக்கவும் முயன்றுள்ளார்.

இந்த வாக்குவாதத்தை தடுப்பதற்கு பேருந்தில் இருந்த இரண்டு சகப்பயணிகள் முயற்சி செய்துள்ளனர்.

பேருந்தில் இருந்த பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து பயணிகளையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடபட்டது.

இது பற்றிய புகார் தங்களுக்கு கிடைத்ததாகவும், தாங்கள் உதவிக்காக காவல் துறையை அணுகியதாகவும் கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK