இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இரண்டு விமானங்கள் மோதல்..!! எங்கே..?? பயணிகளின் நிலை என்ன..??

இந்தியாவின் டெல்லி விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

NDTV மற்றும் ஏ.பி.பி செய்தி அறிக்கையின் படி நேற்றைய ஏப்ரல் 16 டெர்மினல் மண்ணில் நிறுத்தப்பட்டிருந்த Akasa Air விமானத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானமானது மோதியது.

இந்த விபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் உடைய வலது விங்லெட்டும், Akasa Air விமானத்தின் உடைய இடது கிடைமட்ட நிலைப்படுத்தியும் சேதமடைந்தது.

இதனைத் தொடர்ந்து இரு விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விமான மோதல்களில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்திற்கு பிறகு அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக இறக்கப்பட்டதாக Akasa Air விமான நிறுவனமானது தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பயணிகளை விரைவில் அவர்கள் செல்ல வேண்டிய இடமான ஹைதராபாத்திற்கு செல்வதற்காக அந்நிறுவனம் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இது குறித்த விசாரணையை இந்திய சிறு விமான போக்குவரத்தை இயக்குனரகம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

விசாரணையின் முடிவுகள் தெரியும் வரை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானி ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK