சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! என்னவென்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படியுங்கள்!!

தமிழ் பேசும் வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட 50 பேருக்கு ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ என்ற சமய நல்லிணக்க அமைப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி சுற்றுலா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சுற்றுலா தெலுக் ஆயர் வட்டாரத்தில் நடைபெற்றது.

சீன ஆலயம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊழியர்களிடம் சீன பாரம்பரிய சமயத்தின் கலாச்சார கூறுகள் விளக்கப்பட்டன.

சிங்கப்பூரின் வரலாறு , கடந்த கால பூசல்கள் குறித்தும் ஊழியர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.

தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது.

இந்த நடவடிக்கையை பற்றி ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் நிறுவனர் நஸ்ஹத் ஃபஹிமா தெரிவித்தது என்னவென்றால் “சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் சிறப்பான பராமரிப்பு, மதிப்பு மற்றும் உபசரிப்பு ஆகியவை தரப்பட வேண்டும்” என்ற தம் அமைப்பின் நம்பிக்கையை இந்நடவடிக்கை வெளிப்படுத்துவதாக கூறினார்.

பிறரது வாழ்க்கையை மேம்படுத்த நாம் முயற்சிக்கும் பொழுது அவர்கள் வழியாக நம் சொந்த வாழ்க்கை மாறுவதை நான் கண்கூடாக காண்கிறேன் என்றும் வாழ்க்கையின் உண்மை அவர்கள் வழியாக நமக்கு புலப்படுகையில் நமக்கு இடையே உள்ள ஒற்றுமையை பற்றி நாமே அறிந்து கொள்ள முடியும் எனவும் திருவாட்டி நஸ்ஹத் கூறினார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan