சிங்கப்பூர்: அலெக்சாண்ட்ரா ரோட்டில் நேற்று (செப்டம்பர்) 5ஆம் தேதி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து நேற்று(செப்டம்பர் 5) மாலை சுமார் 4:10 மணிக்கு தகவல் கிடைத்ததாக 8 வேர்ல்ட் செய்தித்தளம் கூறியது.
வேன் கட்டுப்பாடு இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என தெரியவந்தது.
விபத்து நடந்த இடத்தில் ஊழியர் ஒருவர் சாலைக்கருகே வேலையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததால் உடனடியாக 38 வயது வேன் ஓட்டுநரை மீட்பதற்கு உதவியில் ஈடுபட்டார்.
வேன் ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்ட சொல்லப்பட்டதாக செய்தி தளம் வாயிலாக தெரியவந்தது. தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.