📌 ஒவ்வொரு நாட்டினரும் “Immigration” குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
📌 சிங்கப்பூருக்கு நீங்கள் வருகை தருவதன் மூலம் எங்களது மதிப்பு உயரும் என்றால் உள்ளே நுழையா அனுமதிக்கிறேன். இல்லையென்றால் மன்னிக்கவும் உள்ளே வர அனுமதி கிடையாது எனவும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களின் வருகையால் சிங்கப்பூரில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. நம் நாட்டில் முக்கியமாக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
உணவகங்கள், தேநீர் விடுதிகள், உற்பத்தி துறைகள், கப்பல் துறைகள் மற்றும் உங்களுக்கு சேவை செய்யும் நபர்களாக நம்முடன் இருந்து வருபவர்கள் வெளிநாட்டு ஊழியர்களே!
அவர்கள் எவ்வளவு அதிகமாக நம்முடன் இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக நமது நாட்டின் பொருளாதாரமும் உயரும். இதை மக்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன் என உள்துறை அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கூறினார்.