தீவு முழுவதும் போலீஸ் ரெய்டு..!! மோசடியில் சிக்கிய 240 பேர் யார்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காவல்துறையினர் தீவிர அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மோசடி வழக்குகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சுமார் 240 ஆண்களும் பெண்களும் தற்போது விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
இந்த மாதம் 5 முதல் 18 ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் நீடித்த அமலாக்க நடவடிக்கையில், 16 முதல் 78 வயதுக்குட்பட்ட 160 ஆண்களும் 79 பெண்களும் போலீசாரின் விசாரணையில் சிக்கினர்.
மின் வணிக மோசடி, அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை,முதலீடு மற்றும் வாடகை மோசடிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட S$5 மில்லியன் வரை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.மோசடி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.