AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

AI இன் வளர்ச்சியால் ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேர் வேலை இழப்பு..!!

தொழில்நுட்ப வளர்ச்சியில் மைல் கல்லாக பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

நிறுவனங்கள் உற்பத்தி திறனை உயர்த்தவும் செலவுகளை குறைக்கவும் பணிகளை தானியங்கி மயமாக்கவும் ஏ ஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

அதாவது உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை இழப்புகள் தொடர்ந்த அதிகரித்து வருகின்றன. வேலை இழப்புகளை கண்காணிக்கும் லே ஆப்ஸ் அமைப்பு இது தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை உலக அளவில் ஐ.டி துறையில் 1.28 லட்சம் பணியாளர்கள் ஏஐ காரணமாக வேலை இழந்துள்ளனர். இது 2025 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 1.24 லட்சம் வேலை இழப்புகளை விட அதிகமாகும்.

2020 ஆம் ஆண்டு உலகளவில் ஐடி துறையில் சுமார் 80 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். 2021 ஆம் ஆண்டில் 15000 ஆக குறைந்தது. ஆனால் அதன் பின்னர் ஏ ஐ தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் எடுத்ததால் 2022 ஆம் ஆண்டில் வேலை இழப்புகள் 1.65 லட்சம் உயர்ந்தன.

2023 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2.65 லட்சம் ஆக உயர்ந்த உச்சத்தை எட்டியது. 2024 இல் 1.52 இலட்சம் ஆகவும் 2025 இல் 1.24 லட்சமாகவும் குறைந்தாலும் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியிலேயே 1.28 லட்சம் பேரின் வேலை பறிபோய் உள்ளன.

இந்த ஆண்டு ஏற்பட்ட வேலை இழப்பு சதவீதத்தில் அமெரிக்கா 71.3 வழிகாட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 7.2 சதவீதமாக இரண்டாவது இடத்தில் உள்ளது ஜெர்மனி 3.4 சதவீதமாகவும் இங்கிலாந்து 2.6 சதவீதமாகவும் உள்ளன.

இந்தியாவில் ஏஐ காரணமாக ஏற்பட்ட வேலை இழப்புகளில் கல்வி துறையே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வித்துறையில் 21.7 சதவீதமும் நிதித்துறை 14.7% உணவுத்துறை 12.3%, போக்குவரத்து 11%, நுகர்வோர் பொருட்கள் துறை 11 சதவீதமும் என்ற அளவில் வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் உள்ளடக்க தயாரிப்பு பாடத்தொகுப்பு உருவாக்கம் மதிப்பீட்டு பணிகள் போன்றவற்றில் ஏ ஐ பயன்பாடு அதிகரித்துள்ளதால் கல்வித்துறையில் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

தரவு உள்ளீடு, வாடிக்கையாளர் ஆதரவு, அடிப்படை மென்பொருள், சோதனை உள்ளடக்க உருவாக்கம், ஆவண பரிசீலனை, கணக்கியல் உதவி போன்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள் அதிக ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.