கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!!

கவனக்குறைவால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவத்தால் 20 மாத சிறை தண்டனை..!!

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஷமீம் என்ற நபர் அவரது பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டது என்று தவறுதலாக புரிந்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவமானது சிங்கப்பூரின் கெப்பல் சாலையில் உள்ள Jit Poh எனும் கட்டிடத்தில் இருக்கும் வங்கதேசத்தின் தூதரகத்திற்கு வெளியே கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி நடந்துள்ளது.

இந்தக் குழப்பத்தால் இவர் தனது வாடகைக்கு எடுத்த லாரியை எடுத்துக்கொண்டு தூதரக கட்டிடத்தின் சுவற்றில் மோதியுள்ளார்.

மேலும் அவர் வைத்திருந்த பெட்ரோலை தூதரகத்தின் நுழைவு வாயில் மீதும் அவரது உடல் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொள்ள போவதாக மிரட்டி இருக்கிறார்.

இறுதியாக அவரது பாஸ்போர்ட் காலாவதியாகவில்லை எனவும் அவருக்கு 2033 ஆம் ஆண்டு வரை பாஸ்போர்ட் வேலிடிட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

பாஸ்போர்ட் சரியாக இருந்தும் அவர் செய்த இந்த சர்ச்சைக்குரிய சம்பவத்தின் முழுமையான காரணம் தெரியவில்லை.

இறுதியாக தவறான புரிதலின் காரணமாக சர்ச்சையை ஏற்படுத்திய நபருக்கு 20 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK