தியோங் பாருவில் திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்..!!!20 வயது இளைஞர் கைது..!!

தியோங் பாருவில் திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்..!!!20 வயது இளைஞர் கைது..!!

சிங்கப்பூர்: தியோங் பாரு, கிம் தியென் சாலை, பிளாக் 131A-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்துமிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாகக் கூறி, 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (26.10.25) இரவு 10.30 மணியளவில் அந்தப் பகுதியில் யாரோ பட்டாசு வெடிப்பதாக தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கூறியதாவது, “இந்த வழக்கு தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்துள்ளதாகவும்,அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் திடீரென்று ஒரு பெரிய சத்தம் கேட்டதும் மேல்தளத்தில் (நிலை 6) 26 வினாடிகள் கொண்ட வீடியோ எடுத்து வைத்ததாகவும் கூறினார்.


மேலும் யாரோ ஒருவர் வாகன நிறுத்துமிடத்தில் பட்டாசு வெடிப்பதை காட்டியது. அந்த வீடியோவில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நீடித்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

இது அக்டோபர் மாதத்தில் தியோங் பாரு பகுதியில் நடந்த இரண்டாவது பட்டாசு சம்பவமாகும்.

இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK