சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு சுமார் 8:40 மணியளவில், புக்கிட் படோக் வெஸ்ட் அவன்யூ 5க்கு சென்ற போது 16 வயதிலேயே இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் விதிகளை மீறி மாறி மாறி ஓட்டிக்கொண்டு செல்வதை காவல்துறையினர் பார்த்ததாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு சிறுவர்களிடமும் ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது தெரிய வந்தது மேலும் அவர்கள் ஊட்டி வந்த மோட்டார் சைக்கிள் பதிவு நீக்கப்பட்ட வாகனம் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது.

பதிவு நீக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்தியதாலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் வாகனத்தை உரிமம் இல்லாமல் ஓட்டிய காரணத்தினாலும் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் குற்றங்கள் சுமத்தப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு குற்றவாளி ஆன 22 வயது ஆண் ஓட்டுனர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் போலியான உரிம தகட்டை பயன்படுத்தி பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 10:15 மணியளவில் விவோ சிட்டி ஷாப்பிங் மாலில் ஊட்டி அந்த நபரை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொத்தமாக மூன்று நபர்களை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பதிவு செய்யப்படாமலோ அல்லது நீக்கப்பட்டு இருந்தாலும் அந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது எனவும் வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுபவர்களும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்று பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK