கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

கொரியா தொழிற்சாலையில் பயங்கர தீபத்து..!!தொழிலாளர்களின் நிலை என்ன..??

தென்கொரிய நகரமான டேஜியோனியில் உள்ள கார் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த தொழிற்சாலையில் நேற்று (மார்ச் 20) பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீப்பற்றி எரியும் பொழுது தொழிற்சாலையில் 170 தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்த செய்தியானது அதிபர் லீ ஜே மியூங்-க்கு தெரியவந்ததும் , மனித வளங்கள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி தீயை அணைத்து உயிர்களைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டார்.

அதிபரின் உத்தரவுப்படி,மத்திய பேரிடர் மேலாண்மை ஆனது விரைந்து செயல்பட்டது. 500 – க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவசரகால படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

விபத்தில் 11 பேர் இறந்துள்ளனர்.மேலும் 59 பேர் காயமடைந்துள்ளனர்.இன்னும் நான்கு பேரை காணவில்லை.

நெருப்பில் 25 பேர் மிகக் கடுமையாக காயப்பட்டிருப்பதாக தென்கொரியா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தீ விரைந்து பரவியதாகவும், சத்தம் கேட்டதாகவும், தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகம் உள்ளூர் நேரப்படி(மார்ச் 20) வெள்ளிக்கிழமை இரவு 11:48 மணி அளவில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த தொழிற்சாலையானது Hyundai, Kia போன்ற கார் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இது “அன்ஜுன் இண்டஸ்ட்ரியல்ஸ்” நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

அன்ஜூன் இண்டஸ்ட்ரியல்ஸ் நிறுவனமானது, தீ விபத்து குறித்த எந்த கருத்துக்களையும் கூறவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK